இதேபோல் பிரான்சில் நடைபெற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் ஃபுட்பால் உலகக் கோப்பை இந்திய அணிக்காக திரு.நேக்கோசன் பாக்கியநாதன் அவர்கள் பங்கேற்று வெள்ளிப் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார். ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத் புதுச்சேரி இயக்குனர் திருமதி.சித்ராஷா அவர்கள் தலைமையில் பங்கேற்று இந்திய நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர் இவர்கள் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதனை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் திரு.அன்பழகன் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மேலாளர் ராம்ஜி புரோசரம் உடனிருந்தார்.
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..
செட்டிக்காட்டில் கராத்தே தகுதிப்பட்டை வழங்கும் விழா – அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்பு