July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்..

மாற்றுத்திறனாளிகளிடம் கனிவோடு மனுக்களைப் பெற்ற ஆட்சியர் கந்தசாமி..

ஈரோடு. ஜூலை. 28

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மனுதாரர்களிடம் நேரில் சென்று மனுக்களை ஈரோடு ஆட்சியர் கந்தசாமி பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில், ஆட்சியர்கள் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று காலை பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

இந்தக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி வந்து ஆட்சியர் கந்தசாமியிடம் கொடுத்தனர்.

அதில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கலைஞர் மகளிர் திட்ட உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் வங்கி கடன், கல்விக்கடன் பெறுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்டங்கள் தங்கள் பகுதிகளில் செய்து தரப்பட வேண்டிய அடிப்படை வசதிகள், உள்ளூர் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் கொடுத்தனர். அதோடு காவல்துறை மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் நேற்றைய கூட்டத்தில் 385 மனுக்கள் வர பெற்றிருந்த நிலையில், அவற்றுக்கான மேல் நடவடிக்கைகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.