June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வேட்பு மனு ஏற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை ஏப்:09

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் மக்கள் சேவகர் டி ஆர் சண்முகசுந்தரம் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்பு மனு ஏற்கப்பட்டதால் ஆதரவாளர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தத் தொகுதியில் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவன் என்னுடைய பணிகளை கடந்த 30 ஆண்டுகளாக அறிந்து தெரிந்து 2026 இல் நான்தான் இங்கே சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்று பெரும் ஆதரவோடு மக்கள் இருந்தனர். இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் எனக்கு சீட்டு கிடைக்கவில்லை ஆதலால் திமுகவிலிருந்து ராஜினாமா செய்து விட்டு சுயேட்சை வேட்பாளராக மக்கள் சேவையில் பணியாற்ற தொடங்குகிறேன்.இதனால் இப்பகுதி மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் என்னை மாபெரும் வெற்றி அடைய செய்வார்கள் என்று தெரிவித்தார்.