வந்தவாசி, ஜூன் 08:.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நேற்று உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். கவிஞர் பூங்குயில் சிவக்குமார் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் க.பூபாலன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, கடலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சு.வெங்கடேசன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் அவர் பேசியதாவது: உணவு பாதுகாப்பு தினம் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 07 ஆம் தேதி கொண்டாப்பட்டு வருகிறது. நாம் உண்ணும் உணவே மருந்து ஆகும். நாம் ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ண வேண்டும், மேலும் குர்குரே, பாஸ்ட் புட், பரோட்டா போன்றவைகளை பெரும்பாலும் உட்கொள்ள கூடாது. தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருள்களை கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்