வீரபாண்டியில் போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:-தேனி. ஜூன்.08-அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநில தலைவர் கதிரேசன் வழிகாட்டுதலின்படி தேனி அருகே வீரபாண்டியில் தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குமுகம்மது இக்பால் தலைமை வகித்தார்.பாண்டி முன்னிலை வகித்தார்.மதுரை மண்டல கௌரவத் தலைவர் பாண்டி சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக,புதிய அரசு பொறுப்பேற்ற பின்பு போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்வு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நாளிலேயே,ஓய்வூதியர்களுக்கும் பஞ்சப்படி உயர்வு வழங்கப்பட்டது.இதனால் ஓய்வூதியர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.700/-வரை ஓய்வூதியத்தில் உயர்வு கிடைக்கும்.போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பஞ்சப்படியை உயர்த்திய தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குமணிகண்டராஜ் நன்றி உரை கூறினார்.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 93,000 பேர் ஓய்வூதியர்களாக உள்ளனர். ஒவ்வொரு முறையும் பணியில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாத நிலையில்,அவர்கள் போராட்டம் நடத்திய பின்னரோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு பின்போ, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கமாக இருந்தது.தற்போது, தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பின், பணியில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிய நாளிலேயே, ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால்,அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர்கள் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசை பாராட்டி வருகின்றனர்.

More Stories
தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
மஞ்சமேடு மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன் கலந்து கொண்டார்