July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காளீங்க நர்த்தனம் அலங்காரத்தில் வாராஹி அம்மன்..!

வந்தவாசி ஜூலை 20:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி – காஞ்சிபுரம் சாலை வெண்குன்றம் லிங்கம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில் நேற்று ஆஷாடா நவராத்திரி விழாவின் 5 ஆம் நாள் வைபவமாக மூல மூர்த்தி அம்மன் காளீங்க நர்த்தனம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் ஹரி சுவாமிகள் மேற்பார்வையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.