புதுச்சேரி | 03-04-2026
புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட சண்முகாபுரத்தில் திமுக வேட்பாளர் வடிவேல் இன்று வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது, அப்பகுதி திமுக பிரமுகர் ஏகராஜன் தலைமையில் இளைஞர் படையுடன் வேட்பாளர் வடிவேலுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள், திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
பொதுமக்களிடையே உரையாற்றிய வேட்பாளர் வடிவேல் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்
வெற்றி பெற்றால் தொகுதிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும்.இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச மனைப் பட்டா பெற்றுத் தரப்படும்.
திரளான பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வு, தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!