கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஆர். குப்புசாமி, மத்தூர் ஒன்றியத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
மத்தூர் – மு க கவுண்டனூர். இணைப்புச் சாலையில் இருந்து தனது வாக்குச் சேகரிப்பைத் தொடங்கிய வேட்பாளர், மத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ‘கை’ சின்னத்திற்கு வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் குணா வசந்த அரசு, தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.கே. நரசிம்மன், மத்திய ஒன்றியச் செயலாளர் வி. செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாநில, மாவட்ட மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA 2, BDA, BLC), பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தோழர்கள், கழகத்தின் மூத்த முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தனர்.


செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!