June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உளுந்தூர்பேட்டை காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 7 நபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்கள், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் 05.05.2026 முதல் தினசரி ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனர். இந்நிலையில், 25.05.2026_ந் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு செல்லும் போது உளுந்தூர்பேட்டை-சேலம் ரவுண்டாணா அருகே மர்ம கும்பல் வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தனிப்படையினரின் விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கி, அடைக்கலம் கொடுத்து உதவிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றபட்டுள்ளன.

இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடரும்.