வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார் வெற்றிக்கு உழைக்க உறுதி ஏற்பு..
ஈரோடு. ஏப்ரல். 07
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக தேர்தல் பணிமனை நேற்று மொடக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் வேட்பாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
என்னை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜக வேட்பாளராக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கிருத்திகா சிவகுமார் தொகுதி முழுவதும் அதிமுக பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை மொடக்குறிச்சியில் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகா சிவக்குமார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணியம், பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் செந்தில், முன்னாள் எம்பி சின்னையா மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ டாக்டர் சி. சரஸ்வதி உள்ளிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேட்பாளர் எஸ் கிருத்திகா சிவக்குமார் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.