புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி சார்பில் மே தின விழா கழகத்தின் தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கணவரை இழந்து தனித்துவமாய் நின்று உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிறந்த பெண்மணிகளுக்குவிருது வழங்கும் விழா ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிரணியின் சார்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மே 1 ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அவர்கள் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். விழாவிற்கு மகளிரணி தலைவி வாசுகி விருதுகள் வழங்கி கொண்டாடினார். கௌரவ அழைப்பாளராக நம்பிக்கை கதிர் மகளிர் குழு தலைவி நிர்மலா ஜேம்ஸ் கலந்து கொண்டார். அவருக்கு வாசுகி தனது கரங்களால் பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார். மேலும் விழாவில் கலந்துகொண்ட உழைக்கும் ஏழை பெண்கள் 16 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்தி சிறப்பு செய்யும் விதமாக அனைத்து பெண்களுக்கும் , மகளிரணி தலைவி வாசுகி அவர்கள் சால்வை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார் .
விழாவில் ஆர் எல் வெங்கட்ராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது மே தினம் உருவான வரலாற்றை பெண்களுக்கு புரியும்படியாக எடுத்துக்கூறி, அமெரிக்காவில் உழைப்பாளிகளின் உரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் உழைக்கும் தொழிலாளர்கள் போராட்ட களத்தில் தனது உயிரை தியாகம் செய்து பெற்று தந்தது தான் இந்த உழைப்பாளர்கள் தினம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்றும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்ந்து, உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற தாரக மந்திரத்தை மறவாமல் கடைபிடித்து எதிர்காலத்தை வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை கேட்டு பெறவேண்டும் என்றும் அறிவுரை கூறினார். மேலும் எந்த தொழிலும் தீண்ட தகாதது இல்லை. நமது சக்திக்கு எந்த தொழில் செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்தாலே வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கூறி அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
விழாவில் சிவக்குமரன் , கோமதிசங்கர், மகளிரணி செயலாளர் அமுதா, பொருளாளர் லக்ஷ்மி பிரியா, ராஜ்பவன் தொகுதி தலைவி கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள். இறுதியில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
அன்புடன்
ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!