ஈரோடு செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெருமிதம்..
ஈரோடு. ஏப்ரல். 11
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிருத்திகா திறமைமிக்க இளம் பெண் வேட்பாளர் என, ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பரிமளம் தெரிவித்தார்
.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது தேர்தல் இம்மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நிலையில் தமிழ்நாட்டின் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நீண்ட இருவரிக்குப் பின் இந்த மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏவாக இருந்து வரும் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களின் மருமகள் எஸ். கிருத்திகா சிவக்குமார் பாஜக தலைவி மையால் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதனை தனது மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனைவி தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகா தொடர்ந்து தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் கிருத்திகா உடன் சென்று தாமரை சின்னத்தில் வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பாஜக வேட்பாளர் எஸ். கிருத்திகாவுக்கு ஆதரவாக மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வேட்பாளர் கிருத்திகாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்னர் மாலை 4 மணி அளவில் ஈரோடு பச்சப்பாளி அருகே உள்ள தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையில் ஒரு சிறப்பான நல்லாட்சி நடைபெற்று வருகிறது.
அதேபோல் தமிழ்நாட்டிலும் குடும்ப ஆட்சி நடத்தி வரும் ஊழல் சக்தியாக விளங்கும் திமுகவை அப்புறப்படுத்திவிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி விரைவில் அமையும்.
அத்தகைய சூழல் வருவதற்கு சான்றாக மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி விளங்குகிறது. இங்கு போட்டியிடும் அறிவும், திறமையும் கொண்ட இளம் வேட்பாளராக எங்கள் சகோதரி கிருத்திகா போட்டிருக்கிறார்.
இவர்களின் குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம் இவரது அத்தை டாக்டர் சரஸ்வதி அவர்கள் தற்போது இந்த மொடக்குறிச்சி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
சமுதாயத்தின் மீதும் சமூக நலன் காப்பதிலும் மிகுந்த அக்கறை கொண்ட இளம் வேட்பாளர் கிருத்திகா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது நிச்சயம்.
மேலும் தமிழகத்தில் கஞ்சா, அபின் மதுவகை உள்ளிட்ட போதை பொருட்கள் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மேலும் எல்லா வயதுடைய பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது.
நடிகர் விஜய் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து கோமாளித்தனமான ஒரு அரசியலை செய்து வருகிறார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த எம்ஜிஆர்க்கு பிறகு எந்த நடிகரும் அரசியலில் ஜொலிக்கவில்லை. நடிகர் திலகம் என்று பெயர் எடுத்த சிவாஜி, கேப்டன் விஜயகாந்த், உள்ளிட்ட பலரும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அவர்களால் அரசியலில் பெரிய அளவில் வர முடியவில்லை. இதை நடிகர் விஜய் அவர்கள் தெரிந்து கொண்டால் சரி.
இன்றைய சூழலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறும்.
இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!