செஞ்சி–விழுப்புரம் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எந்தவித முன்னறிவிப்போ அல்லது நோட்டீஸோ வழங்காமல், செஞ்சி NR பேட்டை பொன்பத்தி ஏரிக்கரை பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களை திடீரென வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் செய்வதறியாமல் தவித்த பொதுமக்கள், செஞ்சி வட்டாட்சியரை நேரில் சந்தித்து, சாலைப் பணிக்காக திடீரென வெளியேறுமாறு கூறப்படுவதால் தங்களுக்கு செல்ல வேறு இடமில்லை என்றும், மாற்று இடம் ஒதுக்கி வீட்டுமனை வழங்க வேண்டும் என்றும் கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட செஞ்சி வட்டாட்சியர், போதிய இடவசதி இல்லாமல் வசித்து வரும் குடும்பங்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து, விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்