- திருவண்ணாமலயை தலையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மை அப்பர் தொண்டு நிறுவனம், செஞ்சி சிறுகடம்பூர் சுப்பிரமணியசாமி கோவில் வெற்றிவேலன் அறக்கட்டளை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடத்தினர். மக்கள் வெளிச்சம் சிறப்பு செய்தியாளர் தங்கராசு தலைமையேற்று, மக்கள் வெளிச்சம் ஆசிரியர் சுரேஷ்குமார், ஆல் மீடியா பிரஸ் ஜானலிஸ்ட் மாநிலத் துணைத் தலைவர் பாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில்
இதில் திருவண்ணாமலயை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாலர் கல்பனா வயது 36,பெண்களுக்கு தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில
பற்களால் 200 மீட்டர் தூரம் காரை இழுத்து சாதனை நிகழ்ச்சி நடத்தினர்.
மேலும் இவரின் சிறப்பு
பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதமாக 2555 ஆணிகள் மீது 51 யோகா ஆசனங்கள் செய்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளார்,
உலக மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தலைமுடியில் 1500 கிலோ எடை கொண்ட காரை கட்டி 400 மீட்டர் வர இழுத்துச் சாதனை படைத்துள்ளார்
போதைப் பொருளை தடுக்கும் விதமாக உலக மகளிர் தினத்தன்று இரு கண்களையும் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை 8 கிலோமீட்டர் வரை ஓட்டியுள்ளார்,
நிகழ்ச்சியின் இறுதியில் இந்தியன் வங்கி மேலாளர் அமீர்ஜான் பொன்னாடை போர்த்தி பரிசுகளும் வழங்கினார், இறுதியில் ஆல் மீடியா பிரஸ் ஜர்னலிஸ்ட் யூனியன் மாவட்ட தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்