June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க ஆலோசனை கூட்டம்

வந்தவாசி, ஜூன் 29:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கத்தின் ஆலோசனை மற்றும் திட்டமிடல் கூட்டம் நேற்று சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். சங்க ஆலோசகர் கவிஞர் முருகேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சங்க செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் சங்கச் செயல்பாடுகள் மற்றும் தொடர்ந்து நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த ஆக்கப்பூர்வமான கருத்துரைகள் வழங்கப்பட்டது. சங்கச் செயல்பாடுகள் தொடர்ந்து உற்சாகத்தோடு தமிழ்ப் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் சங்கத்தின் தலைவராக பீ.ரகமத்துல்லா அவர்கள் மீண்டும் தொடரவும், சங்கச் செயலாளராக கவிஞர் பா.சீனிவாசன், பொருளாளராக சீ.கேசவராஜ் ஆகியோரும், மற்ற நிர்வாகிகள் முன்பிருந்த துணைப் பொறுப்புகளில் அப்படியே தொடர்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் சங்க உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் எ.தேவா, வந்தை பிரேம், க.வாசு, ஜா.தமீம், சீ.கேசவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.