மணப்பாறை, ஜூன் 28:
சாலை விபத்துகளை குறைத்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், JCI மணவை கிங்ஸ் மற்றும் மணப்பாறை காவல்துறை இணைந்து தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.
JCI மணவை கிங்ஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, மணப்பாறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மணப்பாறை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சின்னையா, வழக்கறிஞர் முல்லை சந்திரசேகர், சௌமா பள்ளி முதல்வர் மனோஜ்குமார், கணேஷ்ராஜா, ராஜசேகர், பெரியசாமி, சிவக்குமார், ஜெயம்சக்திவேல், குணசேகரன், கண்ணன், ராஜேஷ், பழனிபெரியசாமி, ஜிவி, பில்லா சுப்பிரமணி, ஜெய்சங்கர், ரஞ்சித், நவீன், வெங்கடாசலம், ராகுல், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், மணவை ஸ்ரீ முனியப்பன் இருசக்கர நலச் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், தேவசகாயம், முருகேசன், ஸ்ரீ நல்லாண்டவர் இருசக்கர நலச் சங்கம் சார்பில் ராஜகோபால், வின்மணிராஜ், தீபன்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் JCI மணவை கிங்ஸ் உறுப்பினர்கள், மணப்பாறை காவல்துறையினர், இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் பங்கேற்று, தலைகவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியின் போது, “தலைகவசம் உயிர்காக்கும் கவசம்”, “தலைகவசம் அணிவோம் – பாதுகாப்பாக பயணிப்போம்” என்ற விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

More Stories
மத்தூரில் போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு:
தேசிய போலியோ சிறப்பு முகாம்!!