குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்:-தேனி. ஜூன்.29-தேனி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை கம்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார்,கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் கம்பம் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் முன்னிலையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கி தொடங்கி வைத்தார்கள்.போலியோ நோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அங்கன்வாடி மையங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள் கோயில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் சுற்றுலா தலங்கள் குழந்தைகள் நல மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இப்பணிக்காக 3619 களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.தேனி மாவட்டத்தில் வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 902 மையங்களில் நடைபெற்றது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!