வந்தவாசி, ஆக 23:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளதால் பல்வேறு நிலைகளில் விநாயகர் சிலைகள் அமர்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் அரசின் உத்தரவுக்கிணங்க குறிப்பிட்ட அடி உயரமுள்ள காகித கூழ்களால் ஆன விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரையும் வண்ணம் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் விநாயகர் சிலையை வாங்குவதற்கு கிராமப் பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…