August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,23/08/2026.

சேலம் அரசு பள்ளியில் வட மாநில ஆசிரியர்கள் இதுதான் உரிமையை காக்கும் முறையா?கொந்தளித்த சீமான்!

சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது என்றும் இதுதான் தவெக அரசு மாநில உரிமைகளைக் காக்கும் முறையா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் யாருடைய உத்தரவின் பேரில் அரசுப் பள்ளியில் வட மாநிலத்தவர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்? தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்களுக்குப் புரிதல் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா? நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தபோதே நம் நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது? என்ற கேள்வியை தான் எழுப்பியதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இத்தகைய தேர்வு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவும், திறனும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களே இல்லையா? பல இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டுகளாக வேலையின்றி வீதியில் போராடிக் கொண்டிருக்கும்போது, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் ஆசிரியர்களாக நியமிப்பது ஏன்? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழ் இளம் தலைமுறைப்பிள்ளைகள் இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்ட முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது என்றும் இதுதான் தவெக அரசு மாநில உரிமைகளைக் காக்கும் முறையா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.