July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசியில் பக்ரீத் சிறப்பு தொழுகை..!

வந்தவாசி, மே 28:

ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அனைத்து ஜமாத் சார்பில் அம்மையப்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா திடலில் பக்ரீத் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி தனது அன்பின் வாழ்த்துக்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.