July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

லயன்ஸ் சங்க புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது – நன்கொடைகள் வழங்கல்

பாண்டிச்சேரி: பாண்டிச்சேரி லயன்ஸ் காஸ்ட்ரோ புரோட்டின் சங்கத்தின் புதிய தலைவராக ஸ்ரீதர் பிள்ளை பொறுப்பேற்கும் விழா அண்ணாசாலையில் அமைந்துள்ள அபிராமி ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கல்வி அமைச்சர் எஸ். பி. சிவக்குமார், தமிழ் சங்க தலைவர் முத்து, கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெகதீஷ், காஷ்மப்படத்தின் முன்னாள் தலைவர் ஜி. வி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், சங்க செயலாளர் திரு வேங்கடம், பொருளாளர் சிவகுமார் (ஜி.எல்.பி.), திரு மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான லயன்ஸ் சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

விழாவில், புதிய தலைவர் ஸ்ரீதர் பிள்ளை சரோன் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10,000 நன்கொடையாக வழங்கினார். அதேபோல், சங்கத்தின் சார்பில் மளிகைப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், புதுச்சேரி ஜெயராம் ஹோட்டல் எதிரில் அமைந்துள்ள ஐயப்பன் சேவா சங்கத்தின் திருப்பணி நிகழ்விற்காக மதிவாணன் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்கினார்.

இவ்விழாவில் தமிழ் சங்கத் தலைவர் முத்து அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதேபோல்
வாழ்நாள் சாதனையாளர் விருது மருத்துவர் ஜெகதீஷ் அவர்களுக்கும் தொழிலதிபர் மணநாதன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த நிகழ்ச்சி சமூகப் பணிக்கான லயன்ஸ் சங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.