July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர் சந்திப்பு.

இன்று கொட்டும் மழையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி வெற்றி பேரணியாக அமைந்துள்ளது.

அப்போதைய பராசக்தி படத்தில் இருந்து தான் எனக்கு விழிப்புணர்வு வந்தது, மொழிப்போர் குறித்து எதுவும் தெரியாது நிலையில் அதிலிருந்து தான் தெரிந்து கொண்டேன். அந்த கால கட்டத்தில் பல துரோகங்களை செய்துவிட்டு அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள், இன்று வெளியிட்டுள்ள பராசக்தி படமும் மக்களை ஏமாற்றும் ஒரு விஷயமாக தான் செய்துள்ளார்கள். ஈழத்தமிழர் பிரச்சனையிலும் காங்கிரஸ் திமுக போட்ட இரட்டை வேடங்கள் பலருக்கு தெரியவில்லை. இதுபோல விஷயங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் இந்த அமைதி போராட்டத்தை நடத்தினோம்.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, தவெக – தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ஆளும் அரசை பல விஷயங்களில் எதிர்த்து வந்தீர்கள், இடையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றீர்கள், உங்கள் நிலைப்பாட்டில் எதாவது மாற்றம் இருக்கா என செய்தியாளர்கள் கேள்விக்கு – முதலமைச்சரை சந்தித்தது பொங்கல் விழாவுக்கு அனுமதி கேட்டு தானே தவிர, அதற்குள் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என பதில்.

அரசியலை பொருத்த வரை நம் சுய லாபத்தை விட மக்கள் பயண்பெற வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.

என் நிலைபாடு மாற்றத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் காரணமில்லை, மக்கள் நலனே முக்கியம். ஆரம்ப காலத்தில் பாஜகவில் பயணித்த நிலையில், அங்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் தனி கட்சி ஆரம்பித்துள்ளோம்.

தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை தொகுதி பெற்று ஆட்சி அமைத்தாலும் மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் நல்லாட்சியை தர முடியும்.

கூட்டணி விவகாரத்தில் மக்களுக்கு என்ன தேவையோ அதை தான் நாம் செய்ய வேண்டும்.

சில சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு மட்டுமே தெரிவித்து வந்தனர், அவர்கள் எங்கள் கட்சியில் இணையவில்லை.

நம் வெற்றி மக்களுக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும். இனம், மொழி மற்றும் தேசத்திற்கு துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க முடியாது.

இந்த மாதம் இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆதவ் அர்ஜுனா குளறுபடியாக உள்ளார்.