கோவை ஜூன்:14
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ரெய்கி அற்புதம் செய்யும் அதிசய பொருட்கள் கண்காட்சி விற்பனை மற்றும் ரெய்கி மீட்டிங் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் ரெய்கி இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் டாக்டர்.மீனாட்சி தலைமையில் நடைபெற்று வருகிறது.பின்னர் ரெய்கி தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாங்கள் பல வருட காலமாக ரெய்கி பயிற்சி மற்றும் அற்புதம் செய்யும் அதிசய கண்காட்சி மற்றும் விற்பனை செய்து வருகிறோம் உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பயிற்சி சிறப்பாக செய்து வருகிறோம்.
அதனை தொடர்ந்து கோவையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு நாட்கள் அற்புதம் செய்யும் அதிசயப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.இதில் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நல்லபடியாக அவர்களது எண்ணங்கள் நிறைவேற்றி கொள்ளுங்கள் அதேபோல் இதில் ஸவுண்ட் தெரபி என்ற அதிநவீன பயிற்சி உள்ளது இது அதே போல் தேவையற்ற எண்ணங்களை நீக்கி நம்முடைய உடம்பிலும்,மனதிலும் பாசிட்டிவான எண்ணங்களை செயல்படுத்தும் இதில் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் இப்பயிற்சியில் பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.இந்த ஸவுண்ட் தெரபி வெற்றியே நாம் நினைக்கும் அனைத்து நல்லா செயல்களும் நிறைவேறும் என்பதே இதனுடைய சிறப்பம்சமாக இருப்பதால் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஒரு நல்ல செயலை செய்ய எனக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குருமார்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.இதில் ரெய்கி மேலாளர் கணேஷ்பாபு,ராஜேஷ்,உஷாராணி,அருண்,விஜயலட்சுமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

More Stories