July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு…

திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் கே. ஜி அருண் ராஜ்…

திருச்செங்கோடு. ஜூலை. 07

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு திருச்செங்கோட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார் சுகாதாரத்துறை அமைச்சர் கே. ஜி அருண் ராஜ்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு நகர தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே. ஜி அருண் ராஜ் அவர்கள் முதல்வர் பிறந்த நாள் அன்று திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு மோதிரம் பரிசளித்தார்.

மேலும் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பெட்டகத்தையும் அமைச்சர் கே ஜி அருள்ராஜ் வழங்கினார்.

தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில், 52 தவெக நிர்வாகிகள் ரத்த தானம் வழங்கினர். இந்த ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியையும் சுகாதாரத்துறை அமைச்சர் கே. ஜி அருண் ராஜ் தொடங்கி வைத்தார்.

சேலம் கே எஸ் எம் ரத்த வங்கி மற்றும் ஈரோடு கொங்கு ரத்த வங்கி குழுவினர் ரத்தங்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.