July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மருத்துவ கண்டுபிடிப்பு – அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை முறையில் ஒரு புதிய மைல்கல்

Dr. ஆதி ஜோதி பாபு, அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் போன்ற மருத்துவ முறைகளின் அடிப்படையில் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கி வருகிறார். பஞ்சபூதங்களுக்கு நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் இந்த முறையை அவர் கண்டுபிடித்துள்ளார்.

தமது இந்த கண்டுபிடிப்பிற்காக உலக அளவில் 158 நாடுகளின் காப்புரிமை (Patent) பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவிலும் இவருக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முறைக்கு காப்புரிமை பெற்ற முதல் நபர் இவர்தான்.

இந்த காப்புரிமைகளை பெற்றதற்காக, 2024-ஆம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் தலைமையிலான பாராட்டு விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று புதுச்சேரி சட்டசபையில் Dr. ஆதி ஜோதி பாபு தனது மருத்துவ சாதனைகளை எடுத்துரைத்து முதலமைச்சரிடம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டார்.

மேலும், வர்மா கலை (VARMA TREATMENT ) சிகிச்சை முறைக்காகவும் அவர் காப்புரிமை பெற்றுள்ளார். இந்த வர்மா கலை சிகிச்சை முறை, நாடி பார்த்து சிகிச்சை அளிக்கும் முறைகளில் ஒன்றாகும்.

Dr. ஆதி ஜோதி பாபு கடந்த 40 ஆண்டுகளாக குண்டலினி தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தியான முறைகளிலும் ஐந்து வகையான காப்புரிமைகளை பெற்றுள்ளார். இது உலகிலேயே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வர்மா கலை மூலம் நாடி பார்த்து, வாயு, திடம் மற்றும் திரவம் ஆகிய முப்பொருள் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரபஞ்ச சக்திகளுடன் நாடிகளை எவ்வாறு தொடர்புபடுத்தி சிகிச்சை அளிக்கலாம் என்பதை கண்டறிந்துள்ளார். இதற்காகவும் காப்புரிமை பெற்றுள்ளார்.