எம்.எல்.ஏ. ரா. கதிரவன் உத்தரவின் பேரில் விரைந்து நடவடிக்கை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அண்ணாவி நகர் 6-வது வார்டைச் சேர்ந்த தாமரைச்செல்வி (55) என்பவர் மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு மனிதநேய அடிப்படையில் உதவி செய்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
தாமரைச்செல்வி கடந்த சில ஆண்டுகளாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனநல சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாத காரணத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் இருந்த சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மணப்பாறை காவல் நிலையத்திற்கும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த எம்.எல்.ஏ. ரா. கதிரவன், உடனடியாக மணப்பாறை தெற்கு நகரச் செயலாளர் அ. அழகருக்கு சம்பவ இடத்திற்கு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்பேரில், தெற்கு நகரச் செயலாளர் அ. அழகர் மற்றும் நகர துணைச் செயலாளர் சரவண பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து காவல்துறையினரின் உதவியுடன் மூதாட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
பின்னர் திருச்சியில் உள்ள மனநல மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டி மேல்சிகிச்சைக்காக மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் உத்தரவின் பேரில் விரைந்து செயல்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் மூதாட்டியின் நலனையும் உறுதி செய்த தெற்கு நகரச் செயலாளர் அ. அழகர், நகர துணைச் செயலாளர் சரவண பாண்டியன் மற்றும் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
மேலும், மனிதநேய அடிப்படையில் எம்.எல்.ஏ. ரா.கதிரவன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்