புதுச்சேரியில் உள்ள, அரசு ஊழியர் மற்றும் கெளரவ உணவு பங்கீட்டு அட்டை பெற்றுள்ளவர்கள் தவிர்த்து மற்ற உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பாக 4 கிலோ ப அரிசி,
1 கிலோ சமையல் எண்ணெய்,1 கிலோ நாட்டு சர்க்கரை,1 கிலோ ப. பருப்பு மற்றும் , 300 மி.லி பாண்லே நெய் ஆகிய 5 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் இந்த பொங்கல் தொகுப்பு வழங்குவதை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் நல்லவாடு புதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு இன்று 10.01.2026 நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி பாஜக நிர்வாகிகள் அந்தந்த பகுதி முக்கிய பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!