பெருந்துறைதவெக நிர்வாகிகள் கொடுத்த மனுவிற்கு ஆட்சியர் நடவடிக்கை..
ஈரோடு. ஜூலை. 02
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தங்களின் கிராம ஊருக்கு பஸ் வசதி செய்து தர கோரி பெருந்துறை பகுதி தவெக நிர்வாகிகள் கொடுத்த மனு மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குன்னத்தூர் செல்லும் சாலையில் தினசரி மாலை 4:15 மணிக்கு பெருந்துறை பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் உள்ள வீரணம் பாளையம் வழியாக செல்லும் பி 3 அரசு பேருந்து அனைத்து பள்ளிகளின் மாணவ மாணவிகளை ஏற்றுக் கொண்டு கரண்டிபாளையம் பிரிவிற்கு மாலை 4 35 மணிக்கு செல்கிறது.

அங்கு கரண்டிபாளையம் பிரிவு ரோட்டில் அந்த மாணவ மாணவிகளை இறக்கிவிட்டு ஊருக்குள் செல்லாமல் பேருந்து சென்று சென்று விடுகிறது.
இதன் காரணமாக மாலை நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள் சில கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கரண்டிபாளையம் கிராமத்திற்கு செல்கின்றனர். இதன் காரணமாக அந்த மாணவ மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது.
கரட்டிப்பாளையம் பிரிவு ரோடு வழியாக செல்லும் p3 பேருந்து ஊருக்குள் வரவேண்டும் என்றும் அதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் நேரடியாக ஊருக்கு வந்து விடுவார்கள். எனவே அந்தப் பேருந்தை கரண்டிபாளையம் ஊருக்குள் சென்று வர உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி, இந்த மனுவை பெருந்துறை ஒன்றிய தமிழக வெற்றிக்கழக பொருளாளர் யோகேஸ்வரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில் தற்போது அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 10ஆம் என் வழித்தட பேருந்து தற்பொழுது நேற்று முதல் கரண்டிபாளையம் ஊருக்குள் சென்று வருகிறது.
இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்து ஆட்சியரிடம் மனு கொடுத்து, ஊருக்குள் பேருந்து வருவதற்கு முயற்சி எடுத்த தமிழக வெற்றிக்கழக பெருந்துறை ஒன்றிய பொருளாளர் யோகேஸ்வரனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்