July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் ரூ.35.69 லட்சத்தில் புதிய வடிகால் வசதி: அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பி.இரவிக்குமார்

புதுச்சேரி, ஜூலை 03:

புதுச்சேரி பொதுப்பணித்துறை (தேசிய நெடுஞ்சாலைக்கோட்டம்) சார்பில், ஒதியம்பேட்டை பகுதியில் புதிய வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

ஒதியம்பேட்டை பகுதியில் உள்ள அம்மன்குளம் தெருவில் தொடங்கி (சங்கிலித் தொடர் 3/030), அப்துல் காதர் தெரு மதகு (சங்கிலித் தொடர் 3/323) வரையில், “U” வடிவ வடிகால் மறுசீரமைப்புப் பணி (தெற்குப் பகுதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ரூ.39,47,000 நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. இதில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ரூ.35,69,827 மதிப்பீட்டில் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை வரும் 3 மாத காலத்திற்குள் விரைந்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று (ஜூலை 03, வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. இரவிக்குமார் அவர்கள் தலைமை தாங்கி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் K. வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலைக்கோட்ட செயற்பொறியாளர் K. சீனுவாசராம், உதவிப் பொறியாளர் N. சிவப்பிரகாசம், இளநிலைப் பொறியாளர் R. மணிவண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.