புதுச்சேரி:
புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், ‘நீதிகதிர் எக்ஸ்பிரஸ்’ காலை நாளிதழ் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில செய்தியாளர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று (டிசம்பர் 7) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான கா. சபியுல்லா தலைமை தாங்கினார்.
செய்தி ஆசிரியர் எம்.சி. ஆசிக் முஸ்தபா மற்றும் நிர்வாக ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய ஆசிரியர் கா. சபியுல்லா அவர்கள், தான் கடந்து வந்த பாதையை ஒரு கதையாக விவரித்து, வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டு எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதை செய்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் தங்களுக்கு இருக்கும் குறை, நிறைகள் மற்றும் களப்பணியில் உள்ள சவால்கள் குறித்து ஆசிரியரிடம் நேரடியாகக் கலந்து ஆலோசித்தனர்,
இக்கூட்டத்திற்கான முழு ஏற்பாடுகளையும் புதுச்சேரி மாநில தலைமை செய்தியாளர் மணிகண்டன் செய்திருந்தார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!