July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் ‘அரேபிய மந்தி’யின் புதிய கிளை திறப்பு: குடும்பத்துடன் திரண்ட மக்கள்!

புதுச்சேரி, ஜூலை 16:

புதுச்சேரி, மிஷின் வீதி பகுதியில் புகழ்பெற்ற ‘அரேபிய மந்தி’ உணவகத்தின் 7-வது கிளை இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு, அப்பகுதியில் மந்தி பிரியாணியின் சுவையை ரசிக்க ஏராளமான பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் மந்தி விருந்தை அருந்தினர்.

திறப்பு விழா குறித்து உணவக ஊழியர்கள் தெரிவிக்கையில், “குறைந்த விலையில் தரமான உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் முதன்மையான நோக்கம். பொதுவாக பிரியாணி என்றாலே தனித்தனியாக உண்பதை விட, ஒரு குழுவாகவோ அல்லது குடும்பமாகவோ அமர்ந்து உண்ணும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. ‘மந்தி’ என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கலாச்சாரம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து அமர்ந்து சாப்பிடும்போது, அந்த உணவின் சுவையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகிறது. இதனால்தான் ‘அரேபியன் மந்தி’ மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மிஷின் வீதியில் அமைந்துள்ள இந்த புதிய கிளையில், தரமான மசாலா பொருட்கள் மற்றும் தனித்துவமான அரேபிய சமையல் முறைகளைக் கையாண்டு மந்தி தயார் செய்யப்படுவதால், முதல் நாளிலேயே உணவு பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.