June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட திமுக மாநில அமைப்பாளர் சிவா இலவச மோர் வழங்கி தொடங்கி வைத்தார்

கலைஞர் கருணாநிதியின் 103–வது பிறந்த நாள் விழா புதுச்சேரி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா.சரவணன் தலைமையில் மணிக்கூண்டு அருகே கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக மாநில அமைப்பாளர் சிவா அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்த திமுக மாநில அமைப்பாளர் சிவா பொது மக்களுக்கு இலவசமாக நீர் மோர் இளநீர் தர்பூசணி ஆகியவைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்..

நிகழ்வில் தொகுதி திமுக செயலாளர் சவுரி ராஜன் அவை தலைவர் எழிலன், துணை செயலாளர் ரவி, முன்னால் கவுன்சிலர் தனசேகர் தொகுதி இளைஞரணி அமைப்பாளர் மதன்பாபு, துணை செயலாளர் கலைவாணி, மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், சந்துரு,மாநில சுற்றுச்சூழல் அணி நவீன், உள்ளிட்ட முத்தியால்பேட்டை தொகுதி திமுகவை சேர்ந்த அனைத்து பிரிவு நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.