புதுச்சேரி, ஜூன் 8:
புதுச்சேரி நகராட்சி, முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட நயினார் மண்டபம் சுதானா நகர் பகுதியில் உள்ள சித்தர் வீதியில் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இந்த பணிக்கான பூமி பூஜையை முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சார்ந்தவருமான A. ஜான் குமார் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார்.
மேம்பாட்டு நிதியின் கீழ் 2025–2026 ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.24,70,018 மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் K.P. முஜீத், செயற்பொறியாளர் A. சிவபாலன், உதவிப் பொறியாளர் T. வெங்கடாசலபதி, இளநிலைப் பொறியாளர் P. ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த திட்டத்தின் மூலம் சித்தர் வீதியில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பணிகள் விரைவில் தொடங்கி, குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணிகள் நிறைவடைந்த பின்னர், அப்பகுதியில் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், மழைக்காலங்களில் நீர் தேக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.