June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் ரூ.35.34 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்!

​புதுச்சேரி:

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட வள்ளலார் வீதி மற்றும் மேட்டு வீதியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைத்தல் மற்றும் வாய்க்கால்களை மேம்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

​ வள்ளலார் வீதி மற்றும் மேட்டு வீதி சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் வாய்க்கால் மேம்படுத்துதல்.
​ஒப்பந்தத் தொகை: ரூ. 35,34,432/-
​சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2025 – 26).

​இந்நிகழ்ச்சிக்கு நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. J.விவிலியன் ரிச்சர்ட்ஸ் MLA அவர்கள் தலைமை தாங்கி, பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணிகளை ஓம் ஸ்ரீ சாய்ராம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.