June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தும் திட்ட இயக்குனரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி தலித் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பணி புரியும்
பெண் அதிகாரிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தும் திட்ட இயக்குனரை கண்டித்தும்,எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்து ஊழலுக்கு வழி வகுத்து வருவதோடு…தலித் அதிகாரி மற்றும் ஊழியர் மீது சாதிவெறி வன்கொடுமை நிகழ்த்தி வரும் திட்ட இயக்குனர் அருள் விசாகன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தலித் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி மாதா கோவில் அருகே நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள், தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

You may have missed