வந்தவாசி, டிச 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேப்பூர் புனித வளனார் பள்ளி தாளாளர் அருட்பணி AR அந்தோணிசாமி, அருட் சகோதரிகள் பிலோமினா, மேரி, ரெக்ஸ்லின் மைக்கேல் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரைகள் வழங்கினர். மேலும் மாற்றுத் திறனாளிகள், இருளர் இன மக்கள் உள்ளிட்ட ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 90 நபர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள், படுக்கை விரிப்புகள், ஆடைகள், பெட்ஷீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முன்னதாக, மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, சிறப்பு அழைப்பாளர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்