July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாரூர் ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு – மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் (அதிமுக)கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் (தவெக) தெற்கு ஒன்றிய செயலாளர் இரவிச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான காலவாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 2397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 2026ம் ஆண்டு ஜூலை 16 முதல் நவம்பர் மாதம் 22ம் தேதி வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்காக இன்று காலை பாரூர் ஏரியின் மதகை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் (அதிமுக)கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் (தவெக) ஆகியோர் மலர் தூவி திறந்து வைத்தனர்.

அதன்படி பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களின் மூலம் முதல் 5 நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறை பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மில்லியன் கன அடி வீதம் 16.07.2026 முதல் 22.11.2026 வரை மொத்தம் 130 நாட்களுக்கு 2397 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 361 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல் போக பாசனத்திற்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட ஆட்சியர் உத்திரவிட்டு, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் திருமால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.