அமைச்சர் சி. விஜயலட்சுமி ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கினார்…
பள்ளிபாளையம். ஜூன்.06
பள்ளிபாளையம் அருகே காவேரி ஆற்றில் குளிக்க சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூபாய்4 லட்சம் நிவாரணமாக அமைச்சர் சி. விஜயலட்சுமி வழங்கினார்.
பள்ளிபாளையம் அருகே உள்ள அக்ரஹாரம் பகுதி சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், (20). இவர் விசைத்தறி கூலி தொழிலாளி
இவருக்கு திருமணம் ஆகி தேவகி என்ற மனைவியும், மூன்று வயது மற்றும் ஐந்து மாத கைகொழுந்தையும் உள்ளது.
இவர் தனது நண்பரின் தந்தை மறைவிற்கு சென்று விட்டு அருகே இருந்த காவேரி ஆற்றில் குளித்துவிட்டு வெளியே வந்தார், இந்த நிலையில் அப்பகுதியில் திடீரென மழை பெய்த நிலையில், இடி இடித்தது அப்பொழுது மின்னல் தாக்கியது கோபாலகிருஷ்ணன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
இவரை அன்புள்ள அவர்கள் மீட்டு பள்ளிபாளையம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது அப்பக்கதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சருமான சி. சி விஜயலட்சுமி மின்னல் தாக்கி உயிரிழந்த கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் தமிழக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை அமைச்சர் விஜயலட்சுமி வழங்கினார்.
கணவரை இழந்து நிற்கதியாக இருக்கும் தேவதைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்க வைத்தனர். அதற்கு பதில் அளிக்க அமைச்சர் விஜயலட்சுமி, அரசு வேலைக்கான உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதி கூறினார்.
சம்பவத்தை பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!