வந்தவாசி, மார்ச் 13:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கல்லூரி தலைவரும், புதுவை தமிழ்ச் சங்க தலைவருமான கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை வரவேற்றார்.
தெள்ளார் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்தினரை சேர்ந்த 50 மாணவர்களுக்கு நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப.குப்பன் பங்கேற்று, திருக்குறளின் மேன்மைகளை பற்றியும், நரிக்குறவ மாணவர்கள் திருக்குறளை வாசிப்பதற்கான பயிற்சியையும் அளித்தார். மேலும் திருவள்ளுவர் வேடமணிந்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் வட்டார வள மைய பொறுப்பாளர் பாலாஜி வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் கல்லூரி பொருளாளர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!