தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் மற்றும் தயார்நிலை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தாழ்வான பகுதிகளை கண்டறிதல், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், நிவாரண முகாம்கள் அமைத்தல், மீட்பு குழுக்களை தயார் நிலையில் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
ஏரிக்கரையில் தீப்பற்றி எரிந்த மருத்துவக் கழிவுகள்: புகை மண்டலத்தால் போச்சம்பள்ளி பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சுத்திணறல்!
மழை வேண்டி மலைப்பாட்டு பாடி மணப்பாறை கடைவீதியில் நிதி வசூல் செய்த கிராமப்புற பெண்கள்
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!