July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தீய சக்தி தி.மு.க.வை தவிர எங்களுக்கு வேறு எதிரி இல்லைஅமைச்சர் விக்னேஷ் பேட்டி

பழனி, ஜூலை.14-

பழனி அடுத்த கோரிக்கடவு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாமலை நடத்தும் மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தை பாராட்டி பேசியுள்ளார். இது ஆரோக்கியமான அரசியலாக பார்க்கிறேன். எங்களை பொருத்தவரை தீயசக்தி தி.மு.க.வை தவிர வேறு எதிரி இல்லை. வியட்நாம் விபத்தில் பலியான முருகபிரபுவின் உடலை பழனிக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அயலகத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டேன். அவரது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தமிழகத்தை சேர்ந்த அனைவரது உடல்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைகேடாக பதிவு செய்யப்பட்ட நிலங்கள் உடனடியாக மீட்கப்படும்

மோசடி புகார்

பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து அறநிலையத்துறை அமைச்சருடன் கலந்து பேசியுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழக அரசு முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது. அடுத்தடுத்து கடைகளை அடைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் தொழிலாளர்கள் சிலர் தூண்டுதலின் பேரில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது இதுபோன்ற சமயங்களில் தேவையில்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.