திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள காலி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களை ஆண்டுதோறும் நடைபெறும் ஆய்வு முகாமினை தொடங்கி வைத்து பள்ளி பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டு, பின் தீ விபத்து ஏற்படும் போது அதனை பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஒத்திகை தீயணைப்பு துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டதை பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி ஜூன் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் தொடங்கப்பட உள்ளன. அதற்கு முன் பள்ளிகளுக்கான வாகனங்களை தணிக்கை செய்யும் பணிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாயிலாக செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பாக இந்த பணிகள் தொடங்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடைய அலுவலக மைதானத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவர் சார்ந்த அனைத்து
அலுவலர்களும் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் அனைவரும் பல்வேறு நிகழ்வுகளை இதில்
கண்காணித்து வருகிறார்கள். ஒன்று வாகனத்தில் முக்கியமாக இருக்க வேண்டிய பணிகள், இயந்திரம்
சார்ந்த தொழில்நுட்ப பிரிவுகளில் என்னென்ன இருக்கிறது என்பதை முழுமையாக கண்காணித்து
ஆய்வு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவ, மாணவர்களுக்கான பாதுகாப்பு ரொம்ப முக்கியம். காவல்துறை மூலமாக ஒவ்வொரு நாளும் அந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மாணவ மாணவர்களிடம் கனிவாக பேச வேண்டும். எந்த ஒரு கோபமும் படக்கூடாது. ஏனென்றால் அவர்கள் பள்ளிகளை சுமையாக பார்க்காமல் சுகமாக பார்க்க வேண்டும் என்கிற மனப்பாங்கினை சொல்லிக் கொடுக்க சொல்லியிருக்கோம். மாணவ-மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி பேச வேண்டும் அவங்களோட நடத்தைகள் எப்படி இருக்க வேண்டும். என்னென்ன விதமான நடத்தைகளை அவர்கள் கண்காணிக்க வேண்டும் என அனைத்தையும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை
வாயிலாக தேவையான தகவலை சொல்லியிருக்கிறார்கள். அதுபோக ஒவ்வொரு வண்டியிலும் ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்-வுடன் பொருத்தப்பட்ட கேமராக்களில் கண்காணிக்கப்படும்.பேருந்தின் உள்ளே என்னென்ன நிகழ்வுகள் நடக்கிறது? ஏதாவது அசம்பாவித நிகழ்வு நடந்தால் உடனே அதை கண்டுபிடிக்கிறதுக்காகவும், நிகழாமல் தடுப்பதற்காக கண்காணிக்கவும் இந்த சோதனைகள் செய்துள்ளோம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைக்கு திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பாக
1657 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதுபோக வட்டார போக்குவரத்து அலுவலர்
பூவிருந்தவல்லி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் செங்குன்றம் தலைமையிலான பணிகளும்
விரைவில் தொடங்கப்பட்டு அதுவும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளி திறக்கும் முன்பு அனைத்து பணிகளும்
முடிவடையும் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இவ் ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லாதிருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.ரவிச்சந்திரன், திருவள்ளுர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) லிங்கோஷ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர் மா.முருகேசன், பல்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திரளான பள்ளி வாகன ஓட்டுனர்கள் கலந்துக்கொண்டனர்.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தகவல்.:
திருவள்ளூர் மே 24 : திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 14 வட்டாரங்களில் சோழவரம் மற்றும் கடம்பத்தூர் வட்டாரங்கள் நீங்கலாக காலியாக உள்ள 12 வட்டாரங்களிலிருந்து வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி (ஒப்பந்த அடிப்படையில்) தேர்வு செய்ய தகுதியுடைய நபர்களிடமிருந்து உரிய சான்றிதழ்கள் / ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளருக்கான தகுதிகள் விவரம். கல்வித் தகுதி: 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதவும் படிக்கவும், கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் மற்றும் கணினி திறன் இருத்தல் வேண்டும். வயது: விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். முன் அனுபவம்: சுய உதவிக் குழு ஊக்குநராக குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். பிற தகுதிகள்: இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும், தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும், வங்கிகளுக்கு சென்று பரிவர்த்தனைகள் செய்து கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம், ஆண்ட்ராய்டு (Android) கைபேசி வைத்திருப்பவர்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் (SMS) மற்றும் Whatsapp-ல் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!