June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி – மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் காரைப்பட்டியில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு :

திருச்சி டிச- 30:

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி – மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் காரைப்பட்டி என்னுமிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளான தேசிய நான்கு வழிச் சாலையை காரைப்பட்டி என்னும் இடத்தில் அப்பகுதி செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்து ஏற்படுவாதாக இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையை சீர் செய்து தர மறுப்பதாக சாலை மறியலில் ஈடுபட்டனர் ,மேலும் போக்குவரத்து பாதிப்பு தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் குழுவுடன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக உறுதி அளித்தனர் ,மேலும் தகவல் அறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் சாலையை விரைந்து சரி செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.