திருச்சி டிச 17-
12 தொழிலாளர்களுக்கு 95 நாட்களாக வேலை பறிப்பு, போனஸ் மறுப்பு,பல ஆண்டுகளாக வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று தொழிலாளர் நல அதிகாரி உத்தரவை அமல்படுத்தாமல் முதலாளிகளுக்காக மிரட்டல் வழக்கு போடும் காவல் துறையை கண்டித்து அனைத்து சுமை பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முற்றுகை போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமை தீர்க்கும் தொழிலாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடி மாவட்ட தலைவர் ரெங்கராஜ் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சுமை பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்புசுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்