புதுச்சேரி, ஜூலை 18:
புதுச்சேரி காவல்துறைக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘காவல்துறை வண்ணக் கொடி’ (Police Colour) வழங்கும் விழாவையொட்டி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்.
இதனை முன்னிட்டு, கோரிமேடு காவலர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 17-ஆம் தேதி மாலை நடைபெற்ற அணிவகுப்பு மற்றும் விழா ஒத்திகை நிகழ்ச்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் அணிவகுப்பு ஒத்திகை உள்ளிட்ட அம்சங்கள் அதிகாரிகளால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டன.
விழாவை
சிறப்பாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்