July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமுஎகச அமைப்பு தினவிழாவில் மூத்த தோழருக்கு பாராட்டு..!

வந்தவாசி, ஜூலை 20:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 132 ஆவது நிகழ்வு அமைப்பு தினமாக கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு கிளை தலைவர் பூங்குயில் சிவக்குமார் தலைமை வகித்தார் .
கிளை துணைச் செயலர் பெ.எட்டியப்பன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் த.சாந்தி வரவேற்றார். தொடக்கமாக, இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், மற்றும் பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாரத் வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் அமையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி குறித்து பேசினர். வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (கிழக்கு) 5ஆம் வகுப்பு மாணவர்கள் கல்விச் செல்வமா..! பொருள் செல்வமா..! எது சிறந்தது..? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நிகழ்த்தினர். நடுவராக செ.ர.கனியமுதன் செயல்பட்டார். கல்விச் செல்வமே.. என்ற அணியில் மா.திவ்யா ,
க. ஹரி வர்ஷா ஆகியோரும், பொருட்செல்வமே.. என்ற அணியில் சீ.தேவ்தர்சன், கு. கிருத்திகா ஆகியோரும் வாதிட்டனர். இறுதியில் கல்விச் செல்வமே என்று நடுவர் தீர்ப்பளித்தார். நிகழ்வில் கிளையின் மூத்த தோழரான கோ.பாரதி மோகன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அமைப்பு தினம் குறித்து மாவட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் செந்தில் வேலன் சிறப்புரையாற்றினார். துணைத் தலைவரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான ஏ.பி.வெங்கடேசன் சங்கம் குறித்து பேசினார். முன்னதாக சங்கப் பொறுப்பாளர்கள் முனைவர் ம.மகாலட்சுமி, மு.உமா மகேஸ்வரி,
ரஜினி, ஜான் லாரன்ஸ், ஆகியோர் பாடல் பாடினர். நிகழ்வில் தலைமையாசிரியர் ஆ.சித்ரா. ஆசிரியர் தாமரைச் செல்வி, தலைமை ஆசிரியர் க.வாசு, முன்னாள் செயலாளர் க.அஸ்கர் அலி கவிஞர் சுவிஜயசேகர், பட்டிமன்ற பேச்சாளர் ஆர்..எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் சங்க பொருளாளர் ச.காசி நன்றி கூறினார்.