தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தென் மண்டல தலைவர் பி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ.முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர் மற்றும் தலைவர் பி.ஜெய்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தொழிற்துறை வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கொள்கை ரீதியிலான பங்களிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுடன் இந்தியத் தொழிற் கூட்டமைப்பு கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மை குறித்தும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் நிலையான பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!