ஈரோடு தயா அறக்கட்டளை சார்பில் சிறப்பான ஏற்பாடு.
.
ஈரோடு. மார்ச். 29
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக பெருந்துறையில் வாக்குப்பதிவு விழிப்புணர் பேரணி நடைபெற்றது.
வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதைத் தொடர்ந்து அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் மத்தியில் வாக்குப்பதிவு உறுதி செய்யும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் 103. பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்த வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை ஈங்கூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாணவர்கள் மத்தியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பேரணியை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குடியரசுத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் கல்லூரி முதல்வர் ராமன், இ எல் சி ஒருங்கிணைப்பாளர் திவ்யா, தாலுகா வழங்கல் அலுவலர் ராஜகோபால், தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப், உள்பட தேர்தல் நடத்தும் ஆளுவாளாளர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!