மத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள தனியார் சுங்கச்சாவடியில் (டோல்கேட்) பணியில் இருந்த ஊழியரிடம் FASTag ரீசார்ஜ் செய்யாதது தொடர்பாக டெம்போ வாகன ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த டெம்போ ஓட்டுநர் தனது ஆதரவாளர்கள் 30-க்கும் மேற்பட்டோருடன் சுங்கச்சாவடிக்கு வந்து, அங்கிருந்த ஊழியரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்