கோவையில் சிறுமி படுகொலை – குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆறுதல்.
இரண்டு நாட்களுக்கு முன்பு,கோவை மாவட்டம் சூலூரில் சமூக விரோதிகள் இருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் சொந்த ஊரான,சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூரில் அவரது இல்லத்திற்கு, தமிழக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்று, குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவித்தனர்.
இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதில் பாஜ உறுதியோடு இருக்கும் என்று குழந்தையின் பெற்றோர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில், சேலம் மாவட்ட தலைவர் ஹரிராமன், சுற்றுச்சூழல் பிரிவு மாநில அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!